அல்ஹம்துலில்லாஹ்!
மீண்டும் எங்கள் உடலில் உயிரைத் திரும்பச் செய்த அல்லாஹ்வே
உனக்கே நன்றிகள் அனைத்தும்.
எங்கள் நபிகள் நாயகம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அருளைப் பொழிவாயாக!
கருணையாளனே!
கடுமையான நெருக்கடியிலிருந்து எங்களை வெளியாக்கி விசாலாமான வாழ்க்கையின் பக்கம் எங்களைத் திருப்புவாயாக!
எங்களால் பொறுமையாக இருக்க
இயலா சோதனையை
எங்கள் மீது சாட்டிவிடாதே!
எங்கள் உள்ளத்தில் அமைதியையும்
நிம்மதியையும் அதிகரிக்கச் செய்வாயாக!
சிந்தனைக் குழப்பம்,முடிவெடுப்பதில் தடுமாற்றம்,திட்டமிடுவதில் பலவீனம் போன்றவைகளிலிருந்து எங்களைக் காப்பாயாக!
உன்னை திக்ரு செய்வதில் இன்பம் காணும் நாவைத் தருவாயாக!
உன்னை அனுதினமும் நன்றி செலுத்தும் உள்ளத்தைத் தருவாயாக!
உன்னையையே வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவியையும் தேடுகிறோம்.
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” 17:24
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!
25:74)
ஆமீன்.
No comments:
Post a Comment