Sunday, July 5, 2020

ஹதீஸ்



  • بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
  • தினசரி
  •              ஹதீஸ்!!
  • நூல் :  முஸ்லிம்,புகாரி!!
  • """"""""".   """"""""""""""" """""""""'"""

  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
  • ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் 'இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை' என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தினார்கள்.
  • ஸஹீஹ் புகாரி : 1247. 
  • அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

  • அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
  • (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து, சலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்லப் போனார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் சகோதரரே! என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?" என்று விசாரித்தார்கள். அதற்கு "நலமுடன் இருக்கிறார்" என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்?" என்று கேட்டு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ நீளங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது சஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த தோழர்களும் (சஅத் (ரலி) அவர்களை) நெருங்கினார்கள்.
  • ஸஹீஹ் முஸ்லிம் : 1684. 
  • அத்தியாயம் https://mobile-webview.gmail.com/-1880529274/6183543334293221901#m_-1895821996406663806_

ஹதீஸ்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ தினசரி              ஹதீஸ்!! நூல் :  முஸ்லிம்,புகாரி!! """""""...